Posts

Showing posts from September, 2023

புதிரே விடுகதை

ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழந்தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும். விடுகதை உதாரணங்கள் சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அஃது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்) ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அஃது என்ன? (தேன்கூடு) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அஃது என்ன? (தவளை)